Friday, January 1, 2010

சபிக்கப்பட்ட மக்கள்

பாகிஸ்தான் தொலைந்தது
ஈழம் அழிந்தது
தலாய்லாமா இன்னும்
வீடு திரும்பவேயில்லை !!!

ஈழத்திற்கு பரிவு
பாகிஸ்தானும் நம்
தொப்புள்கொடி அன்றோ ?
ஏன் உணரவில்லை ?
அப்படித்தான்

நாமெல்லாம்
உலக
அரசியல் , வியாபாரத்தில்
பகடைக்காய்கள் !?

நேற்று
பனிப்போர் வியாதிகள்
இன்று
ஈழம், பாகிஸ்தான்
நாளை ?
.......................
........................
கண்டிப்பாக
அவனும் மனிதன் தான் !!!!

சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது

Monday, December 28, 2009

ஒரே வீடு

யாதும் ஊரே
யாவரும் கேளீர் - இதை
வெள்ளைக்காரி சொல்லவில்லையே

அவுட்சோர்சிங்கில் சகாக்கள்
இந்தியனுக்கு தாரைவார்த்தனர்
இவள் மட்டும்
தபித்தாள்

ட்ரைனிங்கில் பத்திரக்காளி
துரைகளுக்கு செல்லும்
ரிபோர்ட்டில் நக்கீரர்

இந்தியா .........
புத்தன்,
இராமானுஜன் ,
தெரேசா
புழுங்கிய வீடல்லவா
இந்தியன் இந்தியனாய் நடந்தான்

கடைசி நாள் ..........
பட்டுப்புடவை, மூக்குத்தியில்
ஜொலித்தாலும்
கண்களால் இந்தியர்களுடன் குழந்தையானாள்

யாவரும் ஒன்றே
யாவும் ஒன்றே

சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது